×

வேட்பு மனுவில் பூர்வீக சொத்து மட்டுமே… ஐபிஎஸ் ஆக இருக்கும்போது சம்பாதித்து வாங்கிய சொத்தை மறைத்தாரா? ஒப்புதல் வாக்குமூலத்தால் சிக்கினார் தகரப்பெட்டி அண்ணாமலை

கடலூர் முதுநகர் பகுதியில் பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சானை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திறந்த வேனில் இருந்து நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்திதார். அப்போது சொத்து மதிப்பு உயர்ந்து உள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனது சொத்து கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 117 மடங்கு உயர்ந்திருப்பதை காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். 11% மட்டுமே எனது சொத்து உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மனிதருக்கு நான்கிலிருந்து ஆறு சதவீதம் சொத்து உயரும். நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கியுள்ளேன்.

நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஆனால், எந்த வேலைக்கு செல்லாமல் முழு நேர அரசியலில் ஈடுபடும் அண்ணாமலைக்கு சொத்து எப்படி உயர்ந்தது என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. எப்பவுமே மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் அண்ணாமலை அந்த குற்றச்சாட்டு தவறு என்று அவர்கள்தான் நிரூ.பிக்க வேண்டும் என்று அசர வைக்கும் வகையில் பதிலளிப்பார். ஆனால், நேற்று நிருபர்கள் கேள்வி கேட்கும் போது, நீங்கள் நிரூ.பியுங்கள் என்று கூறுகிறார். மேலும், நிருபர்கள் படிப்பதே இல்லை என்று எப்போவும்போல் அவர்கள் தலையில் பழியை போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

பொய்யும், அண்ணாமலையும் என்றும் பிரியாது போல… நேற்று பேட்டியளிக்கும் போது, ‘நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கியுள்ளேன்’ என்று கூறி உள்ளார். ஆனால், அண்ணாமலை தாக்கல் செய்ய வேட்புமனுவில் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் பூர்வீக சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சொத்துக்கள் எப்போது வாங்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவருடைய தந்தை, தாத்தா பெயரில் உள்ளது. இவர் ஐபிஎஸ் ஆக இருந்த காலத்தில் சொத்துக்கள் வாங்கியதாக எதுவும் கணக்கு காட்டப்படவில்லை.

ஏற்கனவே, இந்த சொத்துக்களின் அரசு வழிக்காட்டி மதிப்பை குறைத்து காட்டி உள்ளது அம்பலமாகி உள்ளது. இவர் காட்டப்பட்ட சொத்துக்கள் மதிப்பு அரசு வழிகாட்டி மதிப்பின்படி ரூ.7.96 கோடி. ஆனால், இவர் காட்டியது வெறும் ரூ.1.12 கோடி. இதேபோல், இவரது மனைவி அகிலாவின் சொத்துக்களும் மறைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அண்ணாமலை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் மனைவி பெயரில் ரூ.50 லட்சம் சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ரூ.53 லட்சம் சொத்து கடந்த 2023ம் ஆண்டு வாங்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021ல் காட்டப்பட்ட சொத்துக்கள் இதில் காட்டப்படவில்லை. மேலும், அண்ணாமலை மற்றும் மனைவி இயக்குனர்களாக உள்ள பெங்களூரு நிறுவனத்தின் மூலம் இருவருக்கும் வரும் வருமானமும் காட்டப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில், பூர்வீக சொத்துதான் தன்னிடம் இருப்பதாக கணக்கு காட்டிவிட்டு ஐபிஎஸ் ஆக இருக்கும் போது சம்பாதித்து வாங்கியது என்று தினமும் ஒரு பொய் சொல்வதுபோல் நேற்றும் ஒரு பொய் சொல்லி சிக்கி இருக்கிறார் தகரப்பெட்டி அண்ணாமலை.

* மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடைசி தலைமுறை வாக்காளர்களாக நாம்தான் இருப்போம்: அமைச்சர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் பணிமனையை திறந்து வைத்து நிதியமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: மோடி ஒன்றும் அகற்றப்பட முடியாத, வீழ்த்தப்பட முடியாத சக்தி இல்லை. வரலாறு காணாத வெள்ளத்தின் பிடியில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கி சிதறுண்டு கிடந்தபோது, எட்டிப் பார்க்காத பிரதமர் மோடி, இன்றைக்கு மூன்று நாளைக்கு ஒருமுறை வருகிறார். நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் வந்தால் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தும் கடைசி தலைமுறை வாக்காளர்களாக நாம்தான் இருப்போம். முதல் முறையாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் இது முதலும் கடைசியுமான தேர்தலாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நயா பைசாகூட வழங்கவில்லை. தமிழகம் ஒரு ரூ.ாய் வரியாக செலுத்தினால், 29 பைசாவை ஒன்றிய அரசு நமக்கு திருப்பி கொடுக்கின்றது. எனவே, தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மோடி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.

* இந்தியாவில் இப்போது அதிகம் விற்பனையாவது ‘மோடி சோப்’: ப.சிதம்பரம் நக்கல்
சிவகங்கையில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: மக்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து தந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். ஆனால் மோடி அரசு கொழுத்த பணக்காரர்களுக்கான அரசு. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 45ஆயிரம் கோடி வரி குறைப்பு செய்யப்படுகிறது. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. இனி தேர்தல் நடைபெறுமா என தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி கூறுகிறார். முதலில் தேசிய கட்சிகளை அழித்து விட்டு மாநில கட்சிகளை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர்.

ஒரே கட்சி, வாழ்நாள் முழுவதும் தானே பிரதமராக இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார். இந்நிலை இந்தியாவிற்கு வரலாமா? முதலமைச்சரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என நினைத்து பார்த்திருப்போமா? பாஜவில் 2,027 எம்பி, எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உத்தமர்கள். இவர்கள் மீது வழக்கு போடப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் தவறானவர்கள். இவர்கள் மீது வழக்கு போடப்படும். இவர்கள் பாஜவில் சேர்ந்து விட்டால் உடனடியாக மோடி சோப் போட்டு வாஷ் செய்து விட்டால் உடனடியாக உத்தமர்களாகி விடுவர். இப்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாவது மோடி சோப் தான். இவ்வாறு பேசினார்.

* கட்சி மாற மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க… அதிமுக வேட்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் வைரல்
மதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணன் போட்டியிடுகிறார். இவர் இதற்கு முன்பு மதிமுக, திமுக, பாஜ போன்ற கட்சிகளில் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் 4வது கட்சியாக தற்போது அதிமுகவில் இருந்துவருகிறார். இந்நிலையில் அவரிடம் சத்தியம் கேட்டு அதிமுக அடிமட்ட தொண்டன் என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அடிமட்ட அதிமுக தொண்டனின் குமுறல், டாக்டர் சரவணன் சார் மதுரை மக்களுக்கு, ஒரே ஒர் உத்தரவாதம் தர முடியுமா?. அதிமுக தொண்டர்கள் கேட்கிறார்கள் சார்! ஏற்கனவே நீங்க மதிமுக, அதிமுக, திமுக, பாஜ என பல்டி அடிச்சு, பதவிய வாங்கி இருக்கீங்க. இடையில் எப்போதும் சமுதாய அமைப்பிலும் இருக்கீங்க… இதுவே டாக்டர் சரவணான உங்களின் கடந்த கால வரலாறு. நீங்க இனி உயிர் உள்ள வரை அதிமுகவிலேயே இருப்பேன்னு மட்டும் மதுரை பாண்டி கோயிலில் உங்க குடும்பத்தோட சத்தியம் பண்ணி கொடுங்க சரவணன் சார். அதிமுக தொண்டனாக இதை கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post வேட்பு மனுவில் பூர்வீக சொத்து மட்டுமே… ஐபிஎஸ் ஆக இருக்கும்போது சம்பாதித்து வாங்கிய சொத்தை மறைத்தாரா? ஒப்புதல் வாக்குமூலத்தால் சிக்கினார் தகரப்பெட்டி அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : IBS ,Thakarappetti Annamalai ,BJP ,State President ,Annamalai ,Thangar Bachchan ,Cuddalore ,BAMA ,Muthunagar ,IPS ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...