×

திருப்பூர் பாஜ வேட்பாளருக்கு ரூ.32 கோடி சொத்து

திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ஏ.பி.முருகானந்தம் தனது கையிருப்பாக ரூ.1.25 லட்சம், 2 கார், 2 இருசக்கர வாகனம், சேமிப்பு கணக்கு, பத்திரங்கள் உள்பட அசையும் சொத்தாக ரூ.1 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரத்து 666-ம், அசையா சொத்தாக ரூ.5 கோடியே 84 லட்சத்து 66 ஆயிரமும், கடன் ரூ.7.25 லட்சமும் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். மனைவி பிரியாவிடம் கையிருப்பாக ரூ.1.25 லட்சம், 1 கார், 900 கிராம் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், 55 கேரட் வைர நகை, சேமிப்பு கணக்கில் பணம் உள்பட அசையும் சொத்தாக ரூ.3 கோடியே 76 லட்சத்து 63 ஆயிரத்து 222-ம், அசையா சொத்தாக ரூ.20 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம், கடனாக ரூ.5 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ.32.25 கோடிக்கு சொத்து கணக்குகளை காட்டியுள்ளார்.

The post திருப்பூர் பாஜ வேட்பாளருக்கு ரூ.32 கோடி சொத்து appeared first on Dinakaran.

Tags : Tirupur ,BJP ,A.P. ,Muruganantham ,AP ,Muruganandam ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...