×

வத்தலக்குண்டு அரசு பள்ளியில் சேர அழைப்பு

வத்தலக்குண்டு மார்ச் 31: வத்தலக்குண்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கண்ட பள்ளியாகும். எச் வடிவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இப்பள்ளி இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஊரின் மையத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளி கடந்த கல்வியாண்டுக்கு முன்பு வரை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகவே இருந்து வந்தது. கடந்த கல்வி ஆண்டில் இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டது. இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்ட தகவல் மக்களை சென்று அடையவில்லை. இதனால் கடந்த ஆண்டு 2 மாணவிகள் மட்டுமே படித்தனர்.

நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் நிலையில் இப்பள்ளியில் 2 பேர் மட்டுமே படித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து இருபாலர் பள்ளியானதை நன்கு விளம்பரப்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆசிரியர்கள் தங்களுக்குள் பணம் வசூலித்து பேனர் ,துண்டு பிரசுரங்கள் தயாரித்தனர். தேர்தல் நடப்பதால் பேனர் வைக்க இயலாத நிலையில் தற்போது துண்டு பிரசுரங்களை மட்டும் வத்தலக்குண்டு நகர் மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் வரும் கல்வி ஆண்டில் அதிக மாணவிகள் இப்பள்ளியில் படிக்க சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வத்தலக்குண்டு அரசு பள்ளியில் சேர அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Vathalakundu Govt ,Vatthalakundu ,Vatthalakundu Government High School ,Vathalakundu Government School ,
× RELATED வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு...