- புதுச்சேரி
- எடப்பாடி பழனிசாமி
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- மக்களவை
- புதுச்சேரி உப்பளம் ரோட், புதிய துறைமுகம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டார். புதுச்சேரி தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர்; அதிமுக வெற்றி பெற்றால் புதுச்சேரி சிங்கப்பூர் போல மாற்றப்படும். புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு முழுமையாக செயல்பட முடியாத நிலை உள்ளது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலம் நிலவுகிறது. புதுச்சேரி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டுமென்றால் அதிமுக வெற்றி பெற வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரும் தில்லு, திறமை அதிமுகவிற்கு மட்டும் தான் உள்ளது.
துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருந்து புதுச்சேரி விடுவிக்கப்பட வேண்டுமென்றால் அதிமுக வெற்றி பெற வேண்டும். 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சட்டம் – ஒழுங்கு சீர்கேடுதான் காரணம். புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான இருக்கைகளும் காலியாக இருந்தன. புதுச்சேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டம் கலைந்தது. கூட்டம் கலைந்து சென்றதால் சிறிது நேரத்திலேயே பழனிசாமி பேச்சை முடித்துக் கொண்டார்.
The post புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை மக்கள் விரும்புகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.