- பாஜக
- கன்னிலாங்கி எம்பி
- கோவை
- கனிமொழி
- திகுகா
- கணபதி ராஜ்குமார்
- திமுகா
- துணை செயலாளர்
- எம்பி கோ
- கரும்புகடா
கோவை: நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கோவை கரும்புக்கடை பகுதியில் பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி எம்பி கூறியதாவது: பாஜ ஆளும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறிதான். பொய் செய்திகளை பரப்பவே பாஜ குழு வைத்துள்ளது.
பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜ ஏற்படுத்துகிறது. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜ ஆட்சி. கடும் நிதி நெருக்கடியிலும் திமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
The post நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: கனிமொழி எம்பி! appeared first on Dinakaran.