×

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ஊட்டி : புனித வெள்ளியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நேற்று தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஊர்வலங்கள் நடந்தன. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடித்தும் கடைசி 3 நாட்கள் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதும் வழக்கம். இந்நிலையில், ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. துக்க நாளாக கருதப்படும் இந்நாளில் கிறிஸ்தவமக்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வது வாடிக்கைஇந்நிலையில், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தன.

ஒரு சில தேவாலயங்களில் சிலுவை ஏந்தி ஊர்வலமும் நடந்தது. ஊட்டியில் உள்ள மேரி ஹில் பகுதியில் அமைத்துள்ள புனித மரியன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து, பொமக்கள் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்து சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இந்த பிராத்தனையில் ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், புனித மரியன்னை ஆலயத்தின் பங்கு தந்தை செல்வநாதன் மற்றும் பங்கு மக்கள் கலந்துக் கொண்டனர்.
இதேபோன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிலுவை ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

The post புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி appeared first on Dinakaran.

Tags : Good Friday ,Nilgiri district ,Easter ,Christians ,Lent ,Kurutholai ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்