×

கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி

கீழ்வேளூர் : நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மணலூர் கிராமத்தில் செம்மறி ஆடுகள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 70 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான 150 செம்மறி ஆடுகள் கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்திற்கு மேய்ச்சலுக்காக லாரியில் கொண்டு வரப்பட்டன. மணலூர் மேலக்கரை ரோடு வழியாக வயலுக்கு சென்ற லாரி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 70 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜேஷ் மற்றும் முன்று பேர் காயங்களின்றி தப்பினர். இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kiilvellur ,Kilivelur ,Manalur village ,Nagai district ,Nagaraj ,Sivagangai ,Kilyvellur ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் அருகே மேலஇலுப்பூர் பிடாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்