×

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படம் வெளியீடு

டெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் மதீன் அகமது தாஹா, முஸாவிர் ஹூசைன் சாஹிப் ஆகியோரின் விவரங்களுடன் கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த 1ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெங்களூரு போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் வாடிக்கையாளர் போல் ஹோட்டலுக்குள் மர்ம நபர் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நபர் கருப்பு பேண்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக்கவசம் அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதையடுத்து குண்டு வைத்தவர் அடையாளம் காணப்பட்டதாக என்ஐஏ நேற்று தகவல் தெரிவித்திருந்தது. குண்டு வைத்தவரின் பெயர் முசாவிர் ஷாஜிப் ஹுசைன் என்றும் இந்த சதி திட்டத்தை தீட்டியவர் அப்துல் மாதீன் தாஹா என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் மதீன் அகமது தாஹா, முஸாவிர் ஹூசைன் சாஹிப் ஆகியோரின் விவரங்களுடன் கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Bangalore Rameshwaram Cafe bombing incident ,Delhi ,Abdul Madeen Ahmed Daha ,Muzavir Hussain Sahib ,Bangalore Rameswaram cafe bombing ,Dinakaran ,
× RELATED ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும்...