×
Saravana Stores

கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

கோவை: கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகம் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தலைமை ஆசிரியை வழக்கு தொடர்ந்துள்ளார். பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி சீருடையில் 32 மாணவ, மாணவிகள் பங்கேற்றதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் பழிவாங்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Modi Road Show ,Goa ,KOWAI ,KOWA ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!