×

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் பலி

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் தேவாலய ஆராதனையில் பங்கேற்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவினர் கபோரோனில் இருந்து பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

165 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிருஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது.

The post தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : South Africa ,Pretoria ,Caborone ,Moria ,northeastern Limpopo ,JOHANNESBURG ,Dinakaran ,
× RELATED 4 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி