- அமைச்சர்
- நீடாமங்கலம்
- நீடாமங்கலம் வியாபாரிகள் சங்க செயற்குழு
- வர்த்தகர்கள் சங்கம்
- ஜனாதிபதி
- ராஜாராமன்
- காவத்
- ராஜப்பா
- வெங்கடேசன்
- பொருளாளர்
- ரமேஷ் பட்ஜெட்
- தின மலர்
நீடாமங்கலம், மார்ச் 29: நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று வர்த்தகர் சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. கவுவத் தலைவர் ராஜப்பா முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பொருளாளர் ரமேஷ் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத் தலைவர்கள் தீன் சாகுல்ஹமீது, சேகர், சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமஅன்பரசு, சிந்து சுப்ரமணியன், இணை செயலாளர்கள் பாபு, மனோகரன், முஜிபுர் ரஹ்மான், கார்த்திகேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மே 5ல் மதுரையில் நடைபெறும் 41வது வணிகர் விடியல் முழக்க மாநாட்டிற்கு மாவட்ட சங்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் திரளாக பங்கேற்பது, நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் நீண்டகால கோரிக்கையான உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டியதுடன் உடனே பணியை துவங்கியமைக்கு தமிழக அரசுக்கும் பெரும் முயற்சி எடுத்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் வேணு அண்ணாதுரை நன்றி கூறினார்.
The post நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு நன்றி appeared first on Dinakaran.