×

ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி வரும் திரளான பக்தர்கள்

 

நாகப்பட்டினம், மார்ச் 28: ஈஸ்டர் சண்டே விழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி பக்தர்கள் வருகை தருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி 40 நாட்கள் நடந்து வருகிறது. தவக்காலத்தின் நிகழ்வாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவை பாதை நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி குருத்தோலை ஞாயிறு நடந்தது. தவக்காலத்தின் இறுதி நிகழ்ச்சி இன்று (28ம் தேதி) பெரிய வியாழன், 29ம் தேதி புனித வெள்ளி, 31ம் தேதி ஈஸ்டர் சண்டே நடைபெறுகிறது.

இதனால் இந்த வாரம் கிறிஸ்தவர் தவக்காலத்தின் புனித வாரமாக கருதி வருகின்றனர். இதற்காக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பாதயாத்திரையாக தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இரவு, பகலாக பக்தர்கள் சிறிய அளவிலான தேர்களை கட்டி கொண்டு மாதாவின் பாடல்களை ஜொபித்து கொண்டு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

The post ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி வரும் திரளான பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Velankanni ,Easter Sunday festival ,Nagapattinam ,Lent ,Ash Wednesday ,
× RELATED அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெற்கு...