லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல தாதாவும் அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2022 முதல் பல்வேறு நீதிமன்றங்களால் அவருக்கு 8 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏவான அன்சாரி மவு சதார் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
நேற்று மீண்டும் வயிற்று வலி காரணமாக பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு மாரடைப்பால் மரணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறையில் முக்தார் அன்சாரிக்கு விஷம் கலந்த உணவு தரப்பட்டதாகவும் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவரது வக்கீல் கூறியிருப்பதால் உபியில் பதற்றம் நிலவுகிறது. பாண்டா மருத்துவமனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
The post உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.