×
Saravana Stores

தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்கறிஞர்கள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு குழு முயன்று வருகிறது. ஊழல் வழக்குகளில்சிக்கியுள்ள அரசியல்வாதிகளால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.

அரசியல்வாதிகள் தங்களுக்கு சா தகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றங்களுக்கு உள்ளேயும், ஊடகங்களின் வாயிலாகவும் நீதித்துறையை விமர்சிக்கின்றனர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, மற்றவர்களை துன்புறுத்துவது காங்கிரசின் பழங்கால கலாசாரம் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் பதிலளிக்கையில் ,நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது மோடி தாக்குதல் நடத்துவது பாசங்குத்தனத்தின் உச்சம். 10 ஆண்டுகளில் மக்களை பிரித்தாளவும், கவனத்தை திசை திருப்பவும், அவதூறுகளை பரப்புவதையும் தான் அவர் செய்து வந்தார். விரைவில் 140 கோடி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

The post தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Modi ,Congress ,New Delhi ,Senior ,Supreme Court ,Harish Salve ,Bar Council of India ,President ,Mannan Kumar Mishra ,TY Chandrachud ,Dinakaran ,
× RELATED பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது ஏன்? தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்