×

ஈஸ்டர் பண்டிகை தினம் மணிப்பூரில் வேலை நாள்: மக்கள் எதிர்ப்பால் உத்தரவை வாபஸ் பெற்றது பா.ஜ அரசு

இம்பால்: மணிப்பூரில் ஈஸ்டர் பண்டிகை தினம் வேலை நாளாக அறிவித்த உத்தரவை பா.ஜ அரசு வாபஸ் பெற்றுள்ளது. மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு வருகிற மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் சூழலில் திடீரென வேலை நாளாக அறிவிக்கப்பட்டது அங்கு வாழும் கிறிஸ்தவ சமூக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மணிப்பூர் அரசு உத்தரவை மாற்றி அமைத்தது. அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மார்ச் 30ம் தேதி மட்டுமே வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈஸ்டர் பண்டிகை தினம் மணிப்பூரில் வேலை நாள்: மக்கள் எதிர்ப்பால் உத்தரவை வாபஸ் பெற்றது பா.ஜ அரசு appeared first on Dinakaran.

Tags : Easter ,Manipur ,BJP ,Imphal ,BJP government ,Fransingh ,Easter Day ,Day ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் பலி