திருவாடானை, மார்ச் 29: திருவாடானையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலக வளாக அதிர்ஷ்ட கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. உலக சமாதானமும், நன்மையும் வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் அபிஷேக அலங்காரத்துடன் அதிர்ஷ்ட கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
The post கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.