×

8வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கங்கனா சர்ச்சையில் சிக்கிய சுப்ரியாவுக்கு சீட் மறுப்பு: சவுகான், சிந்தியாவை எதிர்க்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் வெளியிட்ட 8வது பட்டியலில் நடிகை கங்கனா சர்ச்சையில் சிக்கிய சுப்ரியாவுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை 208 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. 2ம் கட்ட மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி 14 வேட்பாளர்களை கொண்ட 8வது பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதியில் ஒன்றிய பாஜ அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எதிராக ராவ் யத்வேந்திர சிங்கை களமிறக்கி உள்ளது. அதேபோல் விதிஷா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக பிரதாப் பானு சர்மாவை களமிறக்கி உள்ளது. பாஜவின் மண்டி வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக விமர்சனம் செய்யப்பட்ட காங்கிரசின் சமூக ஊடகத் துறைத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், கடந்த முறை உபியில் உள்ள மகாராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மீண்டும் அவர் மகாராஜ்கஞ்சில் களமிறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சவுத்ரி என்பவர் அந்த தொகுதியில் பேட்டியிடுகிறார். இதன்மூலம் சுப்ரியாவுக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பட்டியலின்படி உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தலா 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் தலா 3 இடங்களுக்கும் சேர்த்து 14 பேர் கொண்ட வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை காங்கிரஸ் அறிவித்த மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

* மார்ச் 31ல் இறுதிப்பட்டியல்
காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை 208 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள அத்தனை தொகுதிகளுக்கும் பட்டியல் மார்ச் 31ம் தேதி இறுதி செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட அத்தனை மாநிலங்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 8வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கங்கனா சர்ச்சையில் சிக்கிய சுப்ரியாவுக்கு சீட் மறுப்பு: சவுகான், சிந்தியாவை எதிர்க்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Supriya ,Chouhan ,Scindia ,New Delhi ,Kangana ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED “ஆம்.. இல்லை.. ஏதாவது ஒன்ன டிக் பண்ணா...