- 53 வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாட்டம்
- ஹூண்டாய்
- மோட்டார் இந்தியா ஃபேக்டரி
- சென்னை
- இயக்குனர்
- தொழில்துறை பாதுகாப்பு
- ஆரோக்கியம்
- செந்தில்குமார்
- 53 வது தேசிய பாதுகாப்பு தினம்
- ஹூண்டாய் மோட்ட
- இந்தியா
- Perumbudur
- பாதுகாப்பு
- இந்தியா தொழிற்சாலை
- தின மலர்
சென்னை: பெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தின விழாவினை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில் குமார் பேசியதாவது: பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது, பாதுகாப்பு விழிப்புணர்வு கலாச்சாரத்தை பணியாளர்களிடையே மேம்படுத்துவது மற்றும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நடத்தை பாதுகாப்பு நுணுக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியமான தேவையையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முழுவதுமாக அணிந்து கொண்டு பணிபுரிந்தால் தான் அவர்கள் பணிபுரியும் இடத்தில் விபத்தில்லா பணிச்சுழல் ஏற்படும். மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தால் தான் தொழிற்சாலையில் விபத்தில்லா பணிச்சூழல் ஏற்படுத்த முடியும்.
மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது, பாதுகாப்பு விழிப்புணர்வு கலாச்சாரத்தை பணியாளர்களிடையே மேம்படுத்துவது மற்றும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். நடத்தை பாதுகாப்பு நுணுக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் .
The post ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா appeared first on Dinakaran.