×

திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 28: திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நாகை சாலை தை கால் தெரு பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகைதீன் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது அய்யூப் தலைமை வகித்தார். செயலாளர் இக்பால் ராஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாரிமுத்து, நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஒன்றிய தலைவர் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சையது யூசுப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட செயலாளர் சீமான் மற்றும் அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Iftar ,Thiruthurapundi ,Thiruthurapoondi ,Thiruvarur District ,Nagai Road ,Thai Kal Street ,Sunnat Jamaat ,Tamil Nadu Muslim Progress Association ,
× RELATED தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல்