×
Saravana Stores

கம்பத்தில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

கம்பம், மார்ச் 28: கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அரவிந்த், தீபக், மகேஷ், ராகுல், சரவணபாண்டி, சுந்தர் மற்றும் சூர்யா ஆகிய மாணவர்கள் இணைந்து கம்பம் உத்தமபுரத்தில் உள்ள ஹசிப் முகமது என்பவர் தோட்டத்தில் இனக்கவர்ச்சி முறையை பயன்படுத்தி மக்காச்சோள பயிரில் தண்டு துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைப்பது பற்றிய விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவர்கள் கம்பம் வேளாண்மை உதவி இயக்குனர் பூங்கோதை வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி முறை குறித்தும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

The post கம்பத்தில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kampam ,Gram Dangal ,Usilambatti Krishna College of Agriculture and Technology ,Arvind ,Deepak ,Mahesh ,Rahul ,Saravanabandi ,Sundar ,Surya ,Hasib Mohammad ,Uttampuram ,Dinakaran ,
× RELATED திராட்சை கொடிகளுக்கு பதிலாக...