- முதியவர்கள் பற்றிய தேசிய கருத்தர
- மதுரை
- கல்லூரி
- சமூக அறிவியல்
- தேசிய சமூக பாதுகாப்பு ஆணைய
- மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அபிவிருத்தி அமைச்சகம்
- மதுரை சமூக அறிவியல் கல்லூரி
- முதியோர் தொடர்பான தேசிய கருத்தரங்கு
- மதுரை சமூக கல்லூரி
- அறிவியல்கள்
மதுரை, மார்ச் 28:ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சமூக பாதுகாப்பு ஆணையம் மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி இணைந்து, முதியோர் பற்றிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரேஸ் கென்னட் பௌண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அகஸ்டஸ் சாமுவேல் டாட், குத்துவிளக்கேற்றி துவக்கவுரையாற்றினார். அப்போது, ‘‘சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முதியோர் பிரச்னைகளை அணுகும்போது, அவர்களின் நிலையில் இருந்து அவற்றை பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்தினார். இந்நிகழ்விற்கு கல்லூரி செயலர் டிவி.தர்மசிங் தலைமை தாங்கிளார். கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் பி.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். விழாவின் இறுதியில் எம்.நிஷாந்த் நன்றி கூறினார்.
The post மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.