×
Saravana Stores

நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்

நத்தம், மார்ச் 28: நத்தம் அருகே அப்பாஸ்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆர்சி ெதாடக்கப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க ஒத்திகை நடைபெற்றது. நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையில் அம்சராஜன் உள்பட 7 தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு குறித்து செயல் முறை விளக்க பயிற்சி அளித்தனர். சமையல் எரிவாயு சிலிண்டர், உடலில் தீ பற்றினால் அவற்றை எவ்வாறு அணைப்பது, தீ காயத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது, தீ எரியும் பகுதியில் இருப்பவர்களை எவ்வாறு பாதுகாத்து மீட்டு முதலுதவிக்கு அழைத்து செல்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதனை பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.

The post நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Natham Appaspuram School ,Natham ,Fire Department ,Government ,RC Ethadakkapally ,Appaspuram ,Station Officer ,Vivekanandan ,Amsa Rajan ,
× RELATED நத்தம் அருகே 10 அடிநீள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு