×

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பாங்காக்: தாய்லாந்தில் தன் பாலின சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்படாமல் இருந்தது. அந்த நாட்டில் 50 லட்சம் பேர் ஒரே பாலின சேர்க்கை உடையவர்கள். இந்நிலையில்,தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா நேற்று நிறைவேற்றியது. மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 பேர் இதற்கு ஆதரவாகவும்,10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 3 பேர் வாக்களிக்கவில்லை,2 பேர் புறக்கணித்தனர். இந்த மசோதா நாடாளுமன்ற செனட்டின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதன் பின்னர் மன்னர் ஒப்புதல் அளித்தால் இது சட்டமாகும். இது சட்டமாக இயற்றப்பட்டால் தைவான்,நேபாளத்தை தொடர்ந்து ஓரின சேர்க்கை,லெஸ்பியன் ஜோடிகளுக்கு திருமண உரிமைகளை அளிக்கும் மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,BANGKOK ,Thailand ,Thai parliament ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...