- Mabi
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜபுவா
- காங்கிரஸ்
- முன்னாள்
- மத்திய அமைச்சர்
- கண்டிலால் புரியா
- ரத்லம்-ஜாபுவா லோக்சபா
- அனிதா
- பாஜக
ஜாபுவா: வாக்குகளை பிரிப்பவர்களின் கைகளை வெட்டுங்கள் என மபி காங்கிரஸ் எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மபி மாநிலம் ரட்லம்-ஜாபுவா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் காந்திலால் புரியா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜ தரப்பில் அனிதா சவுகான் நிறுத்தப்பட்டுள்ளார். காந்திலாலை ஆதரித்து மத்ரானி என்ற இடத்தில் நடந்த தொண்டர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா பேசுகையில், பிலாலா சமூகத்தினர் திருடர்கள், கொள்ளை அடிப்பவர்கள். வாக்குகளை பிரிப்பது பற்றி யாராவது பேசினர் என்பது தெரிந்தால்,அவர்களுடைய வெட்டுங்கள் என்று தெரிவித்தார். பாஜ வேட்பாளரை குறிப்பிட்டுதான் அவர் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
The post வாக்குகளை பிரிப்பவர்களின் கையை வெட்டி விடுங்கள்: மபி எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.