×

கருப்பு ஆடு சிக்கிருச்சா… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலகல

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரின் அறிமுக கூட்டம் சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. அதில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு பேசுகையில்,‘ தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி வழங்கப்படும் என்று கூறினேன். தற்போதுதான் செய்தி பார்த்தேன். மட்டன் (ஆடு) பிரியாணியாமே. அதன்படி தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் ருசியான மட்டன் பிரியாணி காத்திருக்கிறது,’ என்று கூறினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், ‘‘கோட்டைக்குள் அண்ணாமலை என்கிற ஆடு புகுந்துள்ளது. இந்த ஆடு என்ன பாடுபடப்போகிறதோ, தெரியவில்லை. அதை, உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். என்னைப்பொறுத்தவரை ஆடு என்றால், கசாப்பு கடைக்குத்தான் போகும்’’ என கிண்டலாக கூறினார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நேற்று மருதமலை கோயில் அடிவார பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த மலைவாழ் மக்கள் அமைச்சருக்கு ஆடு ஒன்றை பரிசாக வழங்கினர். இதனை பார்த்த டி.ஆர்.பி.ராஜா, நல்ல கருப்பு ஆடு சிக்கிருச்சா.. என்று கிண்டலாக பேசினார். அதற்கு அங்கிருந்தவர்கள், பிரியாணிக்கு தயாராக இருக்கிறது என்று கூறினர். இதனால் அந்த இடம் முழுவதும் கலகலப்பாக இருந்தது.

* 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல்
எண் தொகுதி திமுக அதிமுக பாஜக
1 வடசென்னை கலாநிதி வீராசாமி ராயபுரம் மனோ பால்கனகராஜ்
2 மத்திய சென்னை தயாநிதிமாறன் பார்த்தசாரதி (தேமுதிக) வினோஜ் செல்வம்
3 தென்சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் ஜெயவர்தன் தமிழிசை
4 திருவள்ளூர் சசிகாந்த் செந்தில்(காங்) நல்லதம்பி (தேமுதிக) பொன்.பாலகணபதி
5 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு பிரேம்குமார் வேணுகோபாலன்
(த.மா.கா)
6 காஞ்சிபுரம் செல்வம் ராஜசேகர் ஜோதி வெங்கடேசன் (பா.ம.க)
7 ஆரணி தரணிவேந்தன் கஜேந்திரன் கணேஷ்குமார் (பா.ம.க)
8 அரக்கோணம் ஜெகத்ரட்சகன் விஜயன் கே.பாலு (பா.ம.க)
9 வேலூர் கதிர் ஆனந்த் பசுபதி ஏ.சி.சண்முகம்
(புதிய நீதிக்கட்சி)
10 தருமபுரி மணி அசோகன் சவுமியா அன்புமணி (பா.ம.க)
11 திருவண்ணாமலை அண்ணாதுரை கலியபெருமாள் அஸ்வத்தாமன்
12 கள்ளக்குறிச்சி மலையரசன் குமரகுரு தேவதாஸ் உடையார் (பா.ம.க)
13 சேலம் செல்வ கணபதி விக்னேஷ் அண்ணாதுரை (பா.ம.க)
14 ஈரோடு பிரகாஷ் ஆற்றல் அசோக்குமார் விஜயகுமார் (த.மா.கா)
15 நீலகிரி ஆ.ராசா லோகேஷ் எல்.முருகன்
16 கோவை கணபதி ராஜ்குமார் ராமச்சந்திரன் அண்ணாமலை
17 திருப்பூர் சுப்பராயன் (சிபிஐ) அருணாசலம் ஏ.பி.முருகானந்தம்
18 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி கார்த்திகேயன் வசந்தராஜன்
19 சிதம்பரம் திருமாவளவன்(விசிக) சந்திரஹாசன் கார்த்தியாயினி
20 நாமக்கல் மாதேஸ்வரன் (கொ.ம.தே.க) தமிழ்மணி கே.பி.ராமலிங்கம்
21 கரூர் ஜோதிமணி(காங்) கே.ஆர்.எல்.தங்கவேல் செந்தில்நாதன்
22 நாகப்பட்டினம் செல்வராஜ் (சிபிஐ) சுர்ஜித் சங்கர் எம்.ஜி.ரமேஷ்
23 மதுரை சு.வெங்கடேசன் சரவணன் ராம சீனிவாசன்
24 விழுப்புரம் ரவிக்குமார்(விசிக) பாக்யராஜ் முரளி சங்கர் (பா.ம.க)
25 கிருஷ்ணகிரி கோபிநாத்(காங்) ஜெயப்பிரகாஷ் நரசிம்மன்
26 தேனி தங்க தமிழ்செல்வன் நாராயணசாமி டிடிவி.தினகரன்
(அமமுக)
27 ராமநாதபுரம் நவாஸ்கனி (இ.தே.மு.லீக்) ஜெயபெருமாள் ஓ.பன்னீர்செல்வம்
28 சிவகங்கை கார்த்தி சிதம்பரம்(காங்) பனங்குடி சேவியர் தாஸ் தேவநாதன் யாதவ்
(இ.க.உ.க)
29 பெரம்பலூர் அருண்நேரு சந்திரமோகன் பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)
30 திருச்சி துரை வைகோ(ம.தி.மு.க) கருப்பையா செந்தில்நாதன்(அமமுக)
31 மயிலாடுதுறை வழக்கறிஞர் சுதா(காங்) பாபு ம.க.ஸ்டாலின் (பா.ம.க)
32 தஞ்சாவூர் முரசொலி சிவநேசன்(தே.மு.தி.க) எம்.முருகானந்தம்
33 விருதுநகர் மாணிக்கம் தாகூர்(காங்) விஜயபிரபாகரன்
(தே.மு.தி.க) ராதிகா சரத்குமார்
34 திண்டுக்கல் சச்சிதானந்தம் (சிபிஎம்) நெல்லை முபாரக்
(எஸ்.டி.பி.ஐ) திலகபாமா (பா.ம.க)
35 கடலூர் விஷ்ணு பிரசாத்(காங்) சிவ கொழுந்து (தே.மு.தி.க) தங்கர்பச்சான் (பா.ம.க)
36 தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி சிவகாமி வேலுமணி விஜயசீலன்(த.மா.கா)
37 தென்காசி ராணிஸ்ரீகுமார் டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஜான்பாண்டியன் (த.ம.மு.க)
38 நெல்லை ராபர்ட் புரூஸ்(காங்) ராணி நயினார் நாகேந்திரன்
39 கன்னியாகுமரி விஜய் வசந்த்(காங்) பசலியான் நசரேத் பொன்.ராதாகிருஷ்ணன்
40 புதுச்சேரி வைத்திலிங்கம்(காங்) தமிழ்வேந்தன்(அதிமுக) நமச்சிவாயம்(பாஜக)

The post கருப்பு ஆடு சிக்கிருச்சா… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலகல appeared first on Dinakaran.

Tags : Minister ,D. R. P. Raja Kalakala ,Annamalai ,BJP ,Coimbatore ,Ganapathi Rajkumar ,DMK ,D.R.P.Raja ,Biryani ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...