×

பிரசாரமா…டிபன் டைமா..பூரி சுட்ட ஜி.கே.வாசன்; வடை தின்ற தமிழிசை

பாஜ பிரசாரம் டிபன் கடைகளை நோக்கியே அதிகம் செல்கிறது. பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜி.கே.வாசன், ஒரு கடைக்கு சென்று பூரி சுட்டார். ரோட்டோரக் கடையில் வடைகளை வாங்கி குவித்து, அதை ரசித்து தின்றார் தமிழிசை. சிறுவாபுரி முருகன் கோயிலில் சாமி கும்பிட்டு, திருவள்ளூர் பாஜ வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். பஸ் பயணிகளிடம் வாக்கு கேட்டார்.

அங்கிருந்த டிபன் கடைக்கு சென்ற ஜி.கே.வாசன், பூரி சுட ஆரம்பித்து விட்டார். இதேபோல் தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசையும் நேற்று கோயம்பேடு சிவன் கோவில் பகுதியில் வாக்கு கேட்டு வந்தார். சாலையோர பலகார கடையை பார்த்ததும் நின்றுவிட்டார். அங்கு ஒரு பெண்மணி வடை சுட்டுக்கொண்டிருந்தார். வடையை வாங்கி சுட்டவருக்கே கொடுத்தார். பிறகு தானும் தின்றார். போகிற வழியில் சாப்பிடலாம் என எண்ணி ஐந்தாறு வடைகளை பார்சல் கட்டியும் எடுத்துக்கொண்டார்.

The post பிரசாரமா…டிபன் டைமா..பூரி சுட்ட ஜி.கே.வாசன்; வடை தின்ற தமிழிசை appeared first on Dinakaran.

Tags : Prasarama…Tipan Daima ,GK Vasan ,Tamilisai ,Vada ,BJP ,Tiban ,Siruvapuri ,Murugan ,Temple ,Prasarama ,Tipan Daima ,Puri ,Sutta ,G.K.Vasan ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...