×

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்

திருமலை: பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் நேற்று இரவு திருமலைக்கு வந்தார். அவருடன் அப்போலோ மருத்துவமனை துணை தலைவரும், ராம்சரணின் மனைவியுமான உபாசனா மற்றும் கடந்த 9 மாதங்களுக்கு முன் பிறந்த தங்களது மகள் கிளின்காரா மற்றும் குடும்பத்தினருடன் வந்தனர்.

ராம்சரணுக்கு இன்று 39வது பிறந்த நாள். இதையொட்டி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் அவர் திருமலைக்கு வந்தார். இவர்கள் அனைவரும் திருமலையில் உள்ள ஓய்வறையில் தங்கிவிட்டு இன்று அதிகாலை சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ராம்சரண் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் கோயில் முன் திரண்டிருந்தனர். பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பிரபல தெலுங்கு நடிகை அனிதா, இன்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

The post ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ramsaran Darisanam ,Elumalaiyan Temple ,Thirumalai ,Ramsaran ,Eumalaiaan ,Ramcharan ,Chiranjeevi ,Tirupathi Eumalaiyan ,Apollo ,Eummalayaan Temple ,
× RELATED ‘சாப்பிட்டதும் கிக் ஏறும்’ஐதராபாத்தை கலக்கும் விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை