×

‘மோடி சொன்ன ரூ.15 லட்சம் வரவில்லை’ கையில் பிச்சை பாத்திரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர். இவர் ஏற்கனவே பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று கோவை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும், கழுத்தில் மிளகாய்களை கட்டி கொண்டும், கையில் பிச்சை பாத்திரம் ஏந்திய படியும் தண்டோரா போட்டுக் கொண்டு வந்தார். அவரை 100 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தேர்தல் விதிமுறையின் படி மிளகாய் மாலையை கழட்டிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓட்டுக்கு பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து பிச்சை கேட்க விட்டுவிடுவார்கள் என கூறி இதுபோன்று மிளகாய் மாலை அணிந்து கையில் பிச்சை பாத்திரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் மோடி சொன்ன 15 லட்சமும் இதுவரை வரவில்லை எனவும் தெரிவித்தார்.

The post ‘மோடி சொன்ன ரூ.15 லட்சம் வரவில்லை’ கையில் பிச்சை பாத்திரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Modi ,KOWAI ,NOOR MOHAMMAD ,SUNDARAPURAM AREA ,Pollachy ,Goa ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...