×

லட்சியத்துடன் வாழ்க்கையில் பயணித்தால் எந்த எல்லையையும் தொடமுடியும்

*மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

விராலிமலை : இலுப்பூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் உடன் காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் போது நல்ல வேட்பாளரை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று முதல் முறை வாக்காளர்களான எங்களுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்க என்று கலெக்டரிடம் கேட்ட முதல் முறை வாக்காளிக்க இருக்கும் கல்லூரி மாணவனின் இச்செயலால் அரங்கேமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

இந்திய நாடளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று என்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் தொடர்பான பணிகளிள் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில் வாக்கு பதிவு தேதி நெருங்கி வருவதால் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

அந்த வகையில், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதி, இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் உடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடும் நிகழ்ச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தேர்தல் தொடர்பாக எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆட்சியர் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக அவர்களுக்கு பதில் அளித்தார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர், மாணவர்கள் கடந்து வந்த பள்ளி பருவம், கல்லூரி பருவம் மற்றும் அவர்களிடம் உள்ள தனித்திறன் குறித்து கேட்டறிந்தார். குறிக்கோளை மனதில் கொண்டு லட்சியத்துடன் வாழ்க்கையில் பயணித்தால் எந்த எல்லையையும் மனிதன் அடைய முடியும் என்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து வாக்குச்சாவடி, வாக்குசாவடி முகவர்கள், மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம்,தேர்தல் அலுவலர்கள், வாக்களிக்கும் நேரம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட கலெக்டர் மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

உத்வேகம் அளிக்கிறது

மாணவன் சூரியகுமார் கூறும்போது, கலெக்டருடன் கலந்துரையாடியது ஒரு புதிய உத்வேகத்தை தமக்கு அளிக்கிறது. வாக்களிக்கும் முறை குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும், தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்களை கலெக்டர் எங்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுப்பது எப்படி என்று மாணவர்கள் சார்பில் நான் டிப்ஸ் கேட்டேன். இதற்கு பதிலளித்த கலெக்டர், வேட்பாளர் தேர்வு பற்றி நான் கூறக்கூடாது. அது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு மாறானது என்று கூறிய கலெக்டர் நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது என்று கூறினார்.

The post லட்சியத்துடன் வாழ்க்கையில் பயணித்தால் எந்த எல்லையையும் தொடமுடியும் appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Mercy Ramya ,Ilupur ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா