×

முளைப்புத்திறனை பரிசோதித்து விதைத்தால் அதிக மகசூல் சிறுதானிய சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

*சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து

*இதய நோய், ரத்த அழுத்தம் சீராகும்

அரவக்குறிச்சி : முளைப்பு திறனை பரிசோதித்து விதைத்தால் அதிக மகசூல் கிடைக்கும் சிறுதானிய சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. சிறுதானியங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதயநோய் ரத்த அழுத்தமும் சீராக்குகிறது என்று கரூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட தலைவரும், முன்னோடி விவசாயிமான செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை திட்டமிட்டு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பு, சோளம், கேழ்வ ரகு, சாமை, திணை, குதி ரைவாலி, வரகு, அரிசி, பனிவரகு போன்றவையே நம் மூதாதையரின் உணவு முறைகளில் முன்னுரிமை பெற்றிருந்தன. இவற்றில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் இருப்பதால் உடல் நலத்துக்கு ஏற்ற உணவாக இருந்தன.

மேலும், சிறுதானியங்க ளில் பல மருத்துவகுணம் கொண்ட நோய் எதிர்ப்பு வேதிப்பொருள்களும் இருப்பதால், குறிப்பாக அவற்றிலுள்ள கிளை சிமிக் இன்டெக்ஸ் எனும் வேதிப்பொருள் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாக செயல்பட்டது, மேலும், சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து ஜீரண மாகும் கால அளவு அதி கம் என்பதால் சிறுதானிய உணவு சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவா கும். இதுதவிர. மாதவிடாய் பிரச்சனை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற் றைச் சீராக்குவதிலும், சிறு தானிய உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், குழந்தைகளைத் தாக்கும் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வராமலும்.

சிறுதானிய உணவுகள் தடுக்கின்றன. சுமார் 30, 40 வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பாலான மக்களின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் காலமாற்றத்தால் மக்களின் பிரதான உணவுப் பட்டிய லில் இருந்து படிப்படியாக மறைந்தன. இதனால் நமது ஒரு தலைமுறை மனித சமு தாயம் ஆரோக்கியத்தை இழந்தது. சமீப காலங்க ளாக நமது சித்த, ஆயுர்வேத மருத்துவர்களாலும், உடல் ஆரோக்கியம் மற்றும் உண வுமுறைகுறித்த விழிப்புணர் வுகளாலும், சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து மக்கள் மத்தியில் மீண்டும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதன் பயனாக தற்போது வீடுகளில் தொடங்கி, உணவகங்கள் வரை சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான சிறுதானியங்கள் பயிரிடப் பட்டு மிகக்குறுகியகாலத் தில் அதாவது 65 முதல் 90 நாட்களுக்கு அறுவடை செய்துவிடலாம். அதைத்த விர மிதமான தட்பவெப்ப நிலையிலும் இவை நன்றாக வளரக்கூடியவையாகும்.இதனால் மண்வளம் குறைந்த நிலங்களிலும் சிறுதானிய சாகுபடியை மேற்கொள்ளலாம். சிறுதானியச் சாகுபடி யில் குறைந்த அளவு வேலை மற்றும் முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும். சிறுதானிய சாகு படிகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, சாகுபடிபரப்பளவை அதி கரிக்க பல்வேறு தீவிரமுயற் சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கான பணி கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறுதா னிய பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு அதிக வருமானம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளவதுடன் இதற்கான விதைகள் அனைத் தும் 75 சதவீத முளைப்பு திறன் இருக்க வேண்டும் என்பதால் விதைகளை விதைப்பதற்கு முன்பாக முளைப்பு திறன் குறித்து விதைகளை பரிசோதித்து கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். இதன் மூலம் சிறுதானிய பயிர்களை பயிரிடும் முன் முளைப் புத்திறனை பரிசோதித்து விதைத்தால் அதிக மகசூல் பெற்ற லாபமடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post முளைப்புத்திறனை பரிசோதித்து விதைத்தால் அதிக மகசூல் சிறுதானிய சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...