×

குமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தமிழ் தேர்வில் 201 பேர் ஆப்சென்ட்

*22,888 பேர் எழுதினர்

நாகர்கோவில் : 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் குமரி மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 22 ஆயிரத்து 888 பேர் தேர்வு எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் பாட தேர்வு மற்றும் இதர மொழிப்பாடம் தேர்வு நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 198 பள்ளிகள், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 233 பள்ளிகள் என்று மொத்தம் 431 பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 701 பேர், தனித்தேர்வர் 388 பேர் என 23 ஆயிரத்து 89 பேர் தேர்வு எழுத நுழைவுசீட்டுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 22 ஆயிரத்து 888 பேர் தேர்வு எழுதினர். தமிழ்பாடத்தில் தேர்வு எழுத 4 பேர் விலக்கு பெற்றது உட்பட 201 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்த்தாண்டத்தில் 67 தேர்வு மையங்களும், நாகர்கோவிலில் 49 தேர்வு மையங்களும் என்று 116 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. நேற்று பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில் பறக்கும்படைகள் மற்றும் நிலையான பறக்கும்படை 100 அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணிதம், 4ம் தேதி அறிவியல், 6ம் தேதி விருப்ப மொழிப்பாடம், ஏப்ரல் 8ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.

The post குமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தமிழ் தேர்வில் 201 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...