- சென்னை
- அவின் நிர்வாகம்
- Avin
- அவா
- பெரம்பூர்
- அண்ணாநகர்
- அயனாவரம்
- வில்லிவாக்கம்
- கொரட்டூர்
- மய்லப்பூர்
- வேலச்சேரி
- தாம்பரம்
- அவினின் நிர்வாகம்
- தின மலர்
சென்னை: தவிர்க்க முடியாத சில காரணங்களால் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு பகுதிகளில் பால் விநியோகம் ஒருசில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள ஆவின் நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்ட போதிலும் இத்தகைய தாமதத்திற்கு வருந்துகிறோம். இந்த சூழலில் பொதுமக்கள் தங்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.,
The post சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால் விநியோகத்தில் சிலமணி நேரம் தாமதம் ஏற்படலாம்: ஆவின் நிர்வாகம் appeared first on Dinakaran.