×

பெரம்பலூர் அருகே மனநலம் பாதித்தவர் மீட்டு சிகிச்சைக்கு பிறகு உறவினருடன் அனுப்பி வைப்பு

 

பெரம்பலூர்,மார்ச்27: பெரம்பலூர்அருகே மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவரை மீட்டு சிகிச்சைக்குப்பிறகு உறவினருடன் பெரம்பலூர் மாவட்ட போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரை எஸ்பி பாராட்டினார். பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் மன நலம்பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த கவிராசன் (47) என்ற நபரை கடந்த செப்- 30 ஆம்தேதி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவிஉத்தரவின்படி பெண் கள் மற்றும் குழந்தைகளுக் கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து மீட்டு பெரம் பலூர் தீரன் நகர் பகுதியில் இயங்கி வரும் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா என்பவரிடம் ஒப் படைத்தனர்.

பின்னர் மேற்படி நபரை மனநல மருத்துவர் அசோக் என்பவர்மூலம் வேலா கரு ணை இல்லத்தில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குணமடை ந்ததால் நேற்று( 26ம்தேதி) மேற்படி கவிராசனின் அண்ணனான, தஞ்சாவூர் மாவட்டம், புதுராஜபுரம் வடக்குத் தெருவைசேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம், பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற் றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, ஏட்டு லீலாவதி மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா ஆகியோர், பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நலஅலுவலர் பொம்மி ஆகியோர் முன்னிலையில் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டார்.இந்த செய்தியை அறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி மேற்படி நபரை நல்லமுறையில் உற வினரிடம் ஒப்படைக்க உத விய அனைவரையும் வெகு வாக பாராட்டினார்.

The post பெரம்பலூர் அருகே மனநலம் பாதித்தவர் மீட்டு சிகிச்சைக்கு பிறகு உறவினருடன் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,district ,Thanjavur district ,SP ,Theeran Nagar ,Trichy Chennai National Highway ,
× RELATED திருமாவளவன் எம்பிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்