×
Saravana Stores

கோயில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு

 

மானாமதுரை, மார்ச் 27: மானாமதுரை அருகே ஆஞ்சநேயர் கோயில் பட்டமரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரை வைகை மேம்பாலம் அருகே வரசித்த விநாயர்கோயில் முன் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே 25 அடி உயர இலவம் பஞ்சு மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் இருந்தது. நேற்று பகல் அங்கு சென்ற மர்மநபர்கள் மரத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இதில் பட்டமரம் காற்றுக்கு தீ மளமளவென்று எரியத் துவங்கியது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைத்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். கோயில் மரத்தில் தீ பிடித்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post கோயில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Anjaneya temple ,Varashitha Vinayagar Temple ,Manamadurai Vaigai Overpass ,
× RELATED தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்