×

இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 27: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பிரகாஷ் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாளை (28ம் தேதி) காலை 9 மணியளவில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெப்படை இ.காட்டுப்புதூரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வார்டு, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : India Alliance Activists Meeting ,Tiruchengode ,Namakkal West District ,DMK Secretary ,Mathura Senthil ,Prakash ,India Alliance ,Erode ,Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்