×
Saravana Stores

கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பாஜ-மஜத செயல்வீரர்கள் மோதல்: கர்நாடகாவில் பரபரப்பு

துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூருவில் பாஜ-மஜத கூட்டணி செயல்வீரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இரு கட்சியினரிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பாஜ-மஜத கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. 25 இடங்களில் பாஜவும், 3 தொகுதியில் மஜதவும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் மஜதவினர் மாநிலம் முழுவதும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

இதற்கிடையில் துமகூரு மாவட்டம் துருவகெரெயில் கூட்டணி வேட்பாளருக்கு பிரசாரம் செய்வது தொடர்பாக இரு கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாஜ வேட்பாளர் சோமண்ணாவை ஆதரித்து பிரசாரம் செய்வது குறித்து பேசப்பட்டது. அப்போது மஜத எம்எல்ஏ கிருஷ்ணப்பா பேசும் போது, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது தோல்விக்கு பாஜ தலைவர் கொண்டாஜி விஸ்வநாத் தான் காரணம் என்று பேசினார்.

கொண்டாஜி விஸ்வநாத் மஜதவில் இருந்து பாஜ கட்சிக்கு தாவியவர் என்பதால் ஆத்திரமடைந்தார். உடனே மஜத தொண்டர்கள் எம்எல்ஏ சொன்னது உண்மைதான் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜவுடன் மஜத கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துவரும் நிலையில் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பாஜ-மஜத செயல்வீரர்கள் மோதல்: கர்நாடகாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,-Majatha ,integration ,Karnataka ,Tumakuru ,Bhaj-Majata ,Bajaj ,Majat ,Baja-Majata ,Dinakaran ,
× RELATED குஜராத் பாஜ எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குப்பதிவு