×
Saravana Stores

கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல் ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் நிராகரிப்பு

நியூயார்க்: ஐநாவின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணிப்பதால், காசாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கியது. 4 மாதங்களை கடந்து நீடிக்கும் போரில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர உலகின் சில நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும். அதேபோல், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பணய கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என ஐநாவில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முழுமையான போர் நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வௌியேறுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இஸ்ரேல் புறக்கணித்துள்ளது. இதையடுத்து ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

The post கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல் ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,New York ,Gaza ,UN ,Dinakaran ,
× RELATED நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து...