×

சமூக நெறிமுறைகளை மீறியதற்காக 22 லட்சம் வீடியோக்களை இந்தியாவில் நீக்கியது யூடியூப்

புதுடெல்லி: சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் 22 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கி உள்ளது.யூடியூப் பயனர்கள் அதிக அளவில் உள்ளனர். இதைப்பயன்படுத்தி ஆபாசப்படம், வன்முறையைத் தூண்டுதல், துன்புறுத்தல், வெறுப்புப் பேச்சு ஆகியவற்றை யூடியூப்பில் பதிவிடுகிறார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யூடியூப் வகுத்து அவற்றை நீக்கி வருகிறது. 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் மட்டும் இது போன்ற பொருத்தமற்ற உள்ளடக்கத்தை கொண்டுள்ள 22 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கி உள்ளது.

வீடியோ அகற்றப்பட்ட 30 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் யூடியூப் சமூக விதிமுறைகளை மீறியதற்காக 90 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது. அதே போல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை விட வீடியோ பதிவிறக்குதல்(டவுன்லோட்) பட்டியலிலும் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.

12,43,871 வீடியோ பதிவிறக்குதல்களுடன் சிங்கப்பூர் அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா (7,88,354) மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தோனேஷியா நான்காவது இடத்தையும்(7,70,157), ரஷ்யா 5வது இடத்தையும்(5,16,629) பிடித்துள்ளது.

The post சமூக நெறிமுறைகளை மீறியதற்காக 22 லட்சம் வீடியோக்களை இந்தியாவில் நீக்கியது யூடியூப் appeared first on Dinakaran.

Tags : YouTube ,India ,New Delhi ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!