×

ஜாமீன் நிபந்தனையாக அரசியலில் ஈடுபடுவதை நீதிமன்றம் தடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாநகராட்சி மேயர் சிபா சங்கர் தாசுக்கு கடந்த 2022 ஆகஸ்டில் வழக்கு ஒன்றில் ஜாமீன் வழங்கிய ஒடிசா உயர் நீதிமன்றம், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிபந்தனையை மாற்றக் கோரி, சிபா சங்கர் தாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘‘மனுதாரர் அரசியல் பிரமுகராக இருப்பதால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்றம் மேயரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேயர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்கிற நிபந்தனையை மட்டும் நாங்கள் ரத்து செய்கிறோம். ஏனெனில் இதுபோன்று நிபந்தனை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாக கருதுகிறோம்’’ என கூறி உள்ளனர்.

The post ஜாமீன் நிபந்தனையாக அரசியலில் ஈடுபடுவதை நீதிமன்றம் தடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Court ,Supreme Court ,New Delhi ,Odisha High Court ,Berhampur Municipal Corporation ,Mayor ,Siba Shankar Das ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு