×

மதுராந்தகத்தில் வரும் 30ம்தேதி திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் வரும் 30ம் தேதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்தில் நேற்று முன்தினம் அண்ணா சிலைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திமுக வேட்பாளர் செல்வம் ஆதரித்து, எழுச்சியுடன் பேசினார். இதேபோன்று, வரும் 30ம்தேதி காலை 10 மணியளவில் மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, திறந்த ஜீப்பில் நின்றபடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியையொட்டி மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் 20 ஆயிரம் மக்கள் பங்கேற்க செய்து, பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் கண்ணன், தம்பு, சத்தியசாய், சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, ராமச்சந்திரன், பாபு, பேரூர் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி, கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மதுராந்தகத்தில் வரும் 30ம்தேதி திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,DMK ,Madhuranthak ,Madhurandakam ,Minister ,Udhayanidhi Stalin ,Maduraandakam ,Youth Secretary ,Sports Development ,Anna statue ,Kanchipuram ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை