×

தமிழ்நாட்டில் முதல் இடம்: அதிமுக வேட்பாளருக்கு ரூ.653 கோடி சொத்து: விஐபி வேட்பாளர்களின் சொத்துப்பட்டியல் விவரங்கள்.! தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததன் மூலம் அம்பலம்

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டிலேயே அதிகப்பட்சமாக ஈரோடு அதிமுக வேட்பாளருக்கு ரூ.653 கோடி சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் விஐபி வேட்பாளர்களின் சொத்துப்படியலும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததன் மூலம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். இதுவரை திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் அவர்கள் தங்களது சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளனர். அதன்படி, ஈரோட்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் தனக்கு ரூ.653 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டி தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் பல்வேறு விஐபி வேட்பாளர்களும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்து உள்ளனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துபட்டியலில், ‘தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவி கருணாம்பிகாவின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். ஆற்றல் அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500ம், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் உள்ளது. தவிர, ஆற்றல் அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகைகள், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகைள் உள்ளன. இருவருடைய பெயரிலும் வாகனங்கள் இல்லை. ஆனால், இருவரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன. அவர் அளித்துள்ள சொத்து விவரப்பட்டியலின்படி, ஆற்றல் அசோக்குமாருக்கு மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவியின் பெயரில் ரூ.69 கோடியே 98 லட்சத்து 78 ஆயிரம் அசையும், அசையா சொத்துகளும் உள்ளன. இருவரது சொத்து மதிப்பும் சேர்த்து மொத்தம் ரூ.653 கோடியே 47 லட்சத்து 73 ஆயிரம். கடன் ரூ.12 லட்சம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இவரது மாமியார் சரஸ்வதி, மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கு ரூ.83 கோடி: விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் ராதிகா கையில் ரொக்கம் ரூ.33 லட்சத்து 1,635, வங்கிகளில் வைப்பு நிதி ரூ.19 லட்சத்து 79 ஆயிரத்து 330, பரஸ்பர நிதி, பத்திரங்கள், பங்குகள் ரூ.11 கோடியே 89 லட்சத்து 12 ஆயிரத்து 131, தேசிய சேமிப்பு திட்டம், எல்ஐசி பாலிசி பிரிமியம் ரூ.76 லட்சத்து 67 ஆயிரத்து 497, ரேடன் நிறுவன பங்குகள், முதலீடு ரூ.13 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 572, ஆடி கார் ரூ.59 லட்சத்து 81 ஆயிரத்து 342, தங்கம் 750 கிராம், வெள்ளி 5 கிலோ மதிப்பு ரூ.24 லட்சத்து 2 ஆயிரத்து 505, அசையா சொத்து மதிப்பு ரூ.26 கோடியே 40 லட்சம். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, ஜிஎஸ்டி பாக்கி நிலுவைத்தொகை ரூ.6 கோடியே 51 லட்சத்து 41 ஆயிரத்து 426. மொத்த சொத்து மதிப்பு : ரூ.53 கோடியே 45 லட்சத்து 53 ஆயிரம். கடன் ரூ.14 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 253.

கணவர் சரத்குமார் பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து 684, அசையா சொத்து மதிப்பு ரூ.21 கோடியே 50 லட்சம். மொத்த சொத்து மதிப்பு ரூ.29 கோடியே 82 லட்சத்து 57 ஆயிரத்து 684. கடன் ரூ.19 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 911. அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கி தொகை ரூ.8 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரத்து 735. விஜய பிரபாகரனுக்கு ரூ.55 கோடி: தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கையிருப்பு ரொக்கம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அசையும் சொத்து மதிப்பு ரூ.11 கோடியே 38 லட்சத்து 4 ஆயிரத்து 371, அசையா சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 57 லட்சத்து 55 ஆயிரம், மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 371. கடன் ரூ.12 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரத்து 587. தாயார் பிரேமலதா பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ.3 கோடியே 85 ஆயிரம், அசையா சொத்து மதிப்பு ரூ.48 கோடியே 99 லட்சம். மொத்த சொத்து மதிப்பு : ரூ.55 கோடியே 48 லட்சத்து 84 ஆயிரத்து 383. கடன் ரூ.5 கோடியே 50 லட்சம்.

மாணிக்கம்தாகூருக்கு ரூ.3 கோடி: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சம், அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 632, அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 463, மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 39 லட்சத்து 75 ஆயிரத்து 95, கடன் ரூ.87 லட்சத்து 97 ஆயிரத்து 705. மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.73 லட்சத்து 58 ஆயிரத்து 307, அசையா சொத்து ரூ.3 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரத்து 400. மொத்த மதிப்பு : ரூ.3 கோடியே 77 லட்சத்து 44 ஆயிரத்து 707. நவாஸ்கனிக்கு ரூ.76 கோடி: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: ரூ.12,56,987, மனைவி பர்வீன் ரூ.1,89,450. நவாஸ்கனி குடும்பத்தினர் பெயரில் அசையும் சொத்து ரூ.11.36 கோடி, அசையா சொத்து ரூ.64.77 கோடி. மொத்த சொத்து மதிப்பு : ரூ.76.13 கோடி.
கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.96.25 கோடி: சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் ரூ.96.25 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. கார்த்தி சிதம்பரம் பெயரில் மொத்தம் ரூ.30.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.24.73 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

இதேபோல் அவரது மனைவி பெயரில் ரூ.12.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.29 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. கார்த்தி சிதம்பரத்திடம் கையிருப்பாக ரூ.3.11 லட்சம், ரூ.2.44 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 கேரட் வைரம் உள்ளன. மனைவி பெயரில் கையிருப்பாக ரூ.5.10 லட்சம், ரூ.53.86 லட்சம் மதிப்பிலான 1,727.846 கிராம் தங்கம், ரூ.11.83 லட்சம் மதிப்பிலான 40.738 கேரட் வைரம், ரூ.23.06 லட்சம் மதிப்பிலான 28.721 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. கார்த்தி சிதம்பரம் பெயரில் ரூ.12.32 கோடி கடனும், மனைவி பெயரில் ரூ.11.16 கோடி கடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த சொத்து மதிப்பு : ரூ.96.25 கோடி நாராயணசாமிக்கு ரூ.35 கோடி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெயரில் ரூ.4 கோடியே 96 லட்சத்து 71 ஆயிரத்து 801 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.21 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 950 மதிப்பில் அசையா சொத்துக்களும், கடனாக ரூ.1 கோடியே 29 லட்சத்து 82 ஆயிரத்து 296 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி ராணி பெயரில் ரூ.81 லட்சத்து 1 ஆயிரத்து 704 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.3 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 650 மதிப்பிலான அசையா சொத்துக்களும், ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் கடனும் உள்ளது.

மகன் சூர்யபிரசாத் பெயரில் ரூ.49 லட்சத்து 81 ஆயிரத்து 663 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.3 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 450 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. மகள் சுகன்யா பெயரில் ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் அசையும் சொத்துக்களும், ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 919 மதிப்பிலான அசையா சொத்துக்களும், ரூ.10 லட்சம் கடனும் உள்ளது. மொத்த சொத்து மதிப்பு : ரூ.35 கோடியே 53 லட்சத்து 54 ஆயிரத்து 137. ராஜசேகருக்கு ரூ.42 கோடி: அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர், அவரது மனைவி சரஸ்வதி, மகன் ராஜ்கிரண் சொத்து மதிப்பு விவரங்கள்: ரூ.14 லட்சம் கையிருப்பு, ரூ.1.52 கோடி வங்கி இருப்பு மற்றும் முதலீடுகள், ரூ.2 கோடி மதிப்பிலான 5 சொகுசுகார்கள், ரூ.24 லட்சம் மதிப்பில் லாரி, ரூ.18 லட்சம் மதிப்பில் ஜேசிபி வாகனம், ரூ.28 லட்சம் மதிப்பில் தங்க நகைகள், ரூ.39.49 கோடி அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.42 கோடி சொத்துக்கள் உள்ளது.

நயினாருக்கு ரூ.42.5 கோடி: நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் ரொக்கமாக ரூ.12 லட்சத்து 43 ஆயிரமும், அவரது மனைவியிடம் ரொக்கமாக ரூ.9.50 லட்சமும் உள்ளது. மேலும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.12 கோடியே 61 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.1.91 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 240 பவுன் தங்க நகைகள் ரூ.1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உள்ளன. அவருக்கு ரூ.2.61 கோடி கடன் உள்ளது. ஒரு அம்பாசிடர் கார், இரண்டு இன்னோவா கார்கள், ஒரு விவசாய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. அவரது மனைவி சந்திரா நயினார் நாகேந்திரனுக்கு ரூ.12.03 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.5.98 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மனைவியிடம் 560 பவுன் தங்க நகைகள் ரூ.2 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் உள்ளன. அவருக்கு ரூ.2.52 கோடி மதிப்பில் கடன் உள்ளது.

நயினார் நாகேந்திரன் பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 96 மதிப்பில் 29 ஏக்கர் 30 சென்ட் விவசாய நிலங்கள், வீடுகள், வணிக வளாகங்களும், அவரது மனைவி பெயரில் ரூ.25 லட்சத்து 61 ஆயிரத்து 200 மதிப்பில் 10 ஏக்கர் 31 சென்ட் நிலங்களும் உள்ளன. மொத்த ரூ.42.5 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜான்பாண்டியனுக்கு ரூ.15 கோடி: பாஜ கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 84 ஆயிரத்து 968ம், மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.3 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 34ம் வங்கிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளது. தனது பெயரில் ரூ.4 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரத்து 367 மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளது. மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 88 ஆயிரத்து 68 அசையா சொத்துக்களும் உள்ளது. தனது பெயரில் ரூ.2 கோடியே 5 லட்சமும், மனைவி பெயரில் ரூ.93 லட்சத்து 75 ஆயிரம் கடன்கள் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மொத்த ரூ.15 கோடி சொத்துக்கள் உள்ளன.பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7 கோடி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவில் தனது கைவசம் ரூ.55 ஆயிரம் இருப்பதாக கூறியுள்ளார், தனக்கு அசையும் சொத்துக்கள் ரூ.64 லட்சத்து 3 ஆயிரத்து 778 இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்துகளாக பரம்பரை சொத்து ரூ.6 கோடி 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7 கோடி 63 லட்சத்து 43 ஆயிரத்து 933.

பசிலியான் நசரேத்துக்கு ரூ.9 கோடி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் தனது சொத்து மதிப்பு ரூ.9 கோடி 21 லட்சத்து 83 ஆயிரத்து 31 என்று குறிப்பிட்டுள்ளார். சவுமியா அன்புமணிக்கு ரூ.60 கோடி: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சமும், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 70 பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவை தவிர, ரூ.20 லட்சத்து 71 ஆயிரத்து 840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.1 கோடியே 92 லட்சத்து 1120 மதிப்பிலான 2 ஆயிரத்து 927 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது பெயரில் மட்டும் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.5 கோடியே 59 லட்சத்து 15 ஆயிரத்து 865 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை உட்பட சவுமியா மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில் அசையும், அசையாத சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவையாக ரூ.60 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரத்து 186 உள்ளது. அதேபோல, பல்வேறு வகையில் கடனாக ரூ.9 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 738 உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தனுக்கு ரூ.10 கோடி: மனைவி வங்கி கணக்கில் வெறும் எட்டு ரூபாய்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன், அவரது மனைவியின் சொத்து மதிப்பு விவரங்கள்: ரூ.2 லட்சம் கையிருப்பு, ரூ.20.10 லட்சம் வங்கி இருப்பு மற்றும் முதலீடுகள், ரூ.63.72 லட்சம் மதிப்பில் நகைகள், ரூ.86.82 லட்சம் அசையும் சொத்துகள், ரூ.9 கோடி சொத்துகள் என மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. மேலும் ஒரு வங்கி கணக்கில் வெறும் ரூ.83 மட்டும் உள்ளது. அதேபோன்று அவரது மனைவி வங்கி கணக்கில் ரூ.8 மட்டுமே உள்ளது. ஒரு கிரிமினல் வழக்கு உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கே.பி.ராமலிங்கத்துக்கு ரூ.17.32 கோடி: நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவர் அசையும் சொத்துகளை பொறுத்தவரை தனது பெயரிலும், மனைவி சரஸ்வதி பெயரிலும் நகைகள், வங்கிசேமிப்பு என்ற வகையில் ரூ.5.77கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் அசையா சொத்துக்கள் ரூ.11.55கோடி மதிப்பிலானவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தவகையில் ரூ.17.32 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தனது பெயரிலும், மனைவி பெயரிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாகனக்கடன் ரூ.30 லட்சம் இருப்பதாகவும், மனைவி பெயரில் வீட்டு அடமானக்கடன் ரூ.40 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். துரை வைகோவுக்கு ரூ.37 கோடி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ.2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ.33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287 உள்ளதாகவும், மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி நகை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பெரும்புத்தூரில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவுக்கு ரூ.52 கோடி சொத்துக்களும், வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு ரூ.89 கோடி சொத்துக்களும், தென் சென்னையில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன.

The post தமிழ்நாட்டில் முதல் இடம்: அதிமுக வேட்பாளருக்கு ரூ.653 கோடி சொத்து: விஐபி வேட்பாளர்களின் சொத்துப்பட்டியல் விவரங்கள்.! தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததன் மூலம் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,AIADMK ,Election Commission ,Chennai ,Lok Sabha ,Erode ,Ambalam ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...