- கொடநாடு
- CBCID
- சந்தோஷ்சாமி
- கோயம்புத்தூர்
- முதல் அமைச்சர்
- ஜெயலலிதா
- சசிகலா
- கோடனாட் எஸ்டேட்
- நீலகிரி மாவட்டம்
- சயான்
- வாளையார் மனோஜ்
- சந்தோஷசாமி
- தின மலர்
கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் 8வது நபராக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி என்பவரை கோவை பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது எஸ்டேட் பங்களாவில் உள்ள ஆவணங்கள், தேடி வந்த நபர்களின் நோக்கம், எஸ்டேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகள், பதவியில் இருந்தபோது எஸ்டேட் பங்களாவில் ஆதிக்கம் செலுத்திய நபர்கள் யார்? கொலை, கொள்ளை சம்பவங்களில் அரசியல் கட்சியினர் தொடர்பு உள்ளதா?, யார் சொல்லி எஸ்டேட் பங்களாவில் கொள்ளை நடத்தப்பட்டது?, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? எனபல்வேறு விவரங்களை சந்தோஷ்சாமியிடம் போலீசார் கேட்டனர். இதற்கு சந்தோஷ்சாமி அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்தனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.