×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து, தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டுள்ளது பற்றி ஜெர்மனி கருத்து தெரிவித்தது. கருத்து தெரிவித்த ஜெர்மனிக்கு இந்திய அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஜெர்மனிக்கு எதிர்ப்பு தெரிவித்த சில மணி நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை, கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து appeared first on Dinakaran.

Tags : United States ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,US government ,Kejriwal ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!