×

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் சிக்கல்: OPSகள் இடையே கடும் போட்டி

ராமநாதபுரம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 4 பேர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே 5-வது நபராக மதுரையை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சைகளுக்கு வேட்புமனு பரிசீலினை முடிந்த பின்பே சின்னம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் பெயரில் நேற்று 2 பெரும் இன்று 3 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கலும் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அரசியல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவர 4 முனை போட்டி நடக்கிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதில், அனைத்து கட்சிகளுமே போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டன.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்தடுத்து தமிழக அரசியலில் பின்னடைவே ஏற்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சி, சின்னம், கொடிகளை பயன்படுத்தக்கூடாது என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு என கூறி வந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பாஜக கூட்டணியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட தோல்வி அடையாத ஓ பன்னீர் செல்வம், இதனால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

இப்படியான சூழலில் சுயேச்சையான ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட 5 பேர் சுயேச்சை வேட்பாளரான இவரது பெயரையே கொண்ட இன்னொரு ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் சிக்கல்: OPSகள் இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : O. Panneer Selvam ,Ramanathapuram ,Chief Minister ,OPS ,Dinakaran ,
× RELATED பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்