- அமெரிக்க மாகாணம்
- மேரிலாந்து
- பால்டிமோர்
- வாஷிங்டன்
- ஐக்கிய மாநிலங்கள்
- பதப்ஸ்கோ நதி
- பிரான்சிஸ் ஸ்காட்ட
- தின மலர்
வாஷிங்டன் : அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த ஏராளமான கார்கள் படப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தன. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற மிகப்பெரிய பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை சிங்கப்பூர் கொடியுடன்டாலி என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கையின் கொழும்பு நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2.6 கி.மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறை அதிகாரிகளும் நிலைமை பற்றி அறிந்து கொள்ளவும், மீட்பு பணி மேற்கொள்ளவும் விரைந்து சென்றனர் .விபத்தில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த ஏராளமான கார்கள் படப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தன. பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஷ்மோர் நகரத் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து நீரில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
The post அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து!! appeared first on Dinakaran.