×

தேர்தல் கெடுபிடியால் களையிழந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவால் வருவாய் இழப்பு

சிவகங்கை: தேர்தல் காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை கலையிழந்துள்ளது. வழக்கமாக 1000 முதல் 5000 கால்நடை வரை விற்கப்படும் இச்சந்தையில் திருப்புவனம் பேரூராட்சி சார்பாக ஒரு ஆட்டுக்குட்டிக்கு ரூ.27 கட்டணம் வசூலிக்கப்படும். இச்சந்தைக்கு சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் ரூ.10 லட்சம் வரை கொண்டு வந்து வேன்களில் கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் வருகை குறைந்துவிட்டது. காலை 5 மணிக்கு சந்தை தொடங்கிய நிலையில் 1000க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் திருப்புவனம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post தேர்தல் கெடுபிடியால் களையிழந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவால் வருவாய் இழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam Cattle Market ,Sivagangai ,Thirupuvanam livestock market ,Tiruppuvanam Municipality ,Kerala ,Tiruppuvanam Livestock Market ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி