×

வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச் சிக்கலில் காங்கிரஸ்?.. தேர்தல் பரப்புரைக்கு செல்வதில் சிக்கல்!

டெல்லி: வருமான வரித்துறையால் காங்கிரஸ் கட்சியின் 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகள் முடங்கியுள்ளதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் புக் செய்வது மட்டுமல்லாமல் தேர்தலுக்கான விளம்பரங்கள் மற்றும் பரப்புரைக்கான மேற்கொள்வதில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி நிலைமையை சரி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

ஆனால் தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வருமான வரித்துறை சார்பாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் கூட்டப்படுகிறது. நிதிச் சிக்கலால் மாநிலங்களுக்கான நட்சத்திர பரப்புரையாளர்களை கூட இதுவரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் முதற்கட்டத்தில் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரைவில் பரப்புரையை தொடங்க ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் செலவுகளை மாநிலத் தலைமை செய்ய வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

The post வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச் சிக்கலில் காங்கிரஸ்?.. தேர்தல் பரப்புரைக்கு செல்வதில் சிக்கல்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Congress party ,Dinakaran ,
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா