- முதல் அமைச்சர்
- தூத்துக்குடி
- கே. ஸ்டாலின்
- உச்ச செயலர்
- எடபடி பாலனிசாமி
- எடபாடி பழனிசாமி
- பொது
- தூத்துக்குடி பாராளுமன்றம்
- எம்.கே.
- வியாழன். எம். க.
- ஜனதா கூட்டணி
- நாம் தமிழர் கட்சி
- தூத்துக்குடி கே. ஸ்டாலின்
- பேராயர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.
திமுக வேட்பாளர் கனிமொழி, ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து முதல்வர் பரப்புரை மேற்கொள்கிறார். முதல்வர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்கிழமை) பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வருகைதரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.பின்னர் மாலை 4 மணியளவில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் நெல்லை புறப்பட்டு செல்கிறார். தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என்பதால் தேர்தல் பரபரப்பு நிலவி வருகிறது.
The post தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் appeared first on Dinakaran.