- தந்தை பெரியார் அரசு கல்லூரி
- திணைக்களம்
- வரலாறு முப்பெரும் விழா
- திருச்சி
- வரலாற்றுத் துறை
- தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி
திருச்சி, மார்ச் 26: திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் நான் முதல்வன் பாடம் தொடர்பான கைவினைப்பொருள் கண்காட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விளக்கப்பட கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கு ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் ெஜயக்குமார், நான் முதல்வன் திட்டத்தின் பொறுப்பாசிரியர் முனைவர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் பெமிளா அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்திய சுற்றுச்சூழல் இயக்கங்களும், சூழல் ஆர்வலர்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நான் முதல்வன் பாடத்திட்டம் தொடர்பான கைவினைப் பொருள் கண்காட்சியின் தொடக்க விழாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விளக்கப்பட கண்டகாட்சியும் சிற்றரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அதனை கல்லூரி முதல்வர் திறந்து ைவத்து தலைமையுரையாற்றினார். வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் கல்பனாதேவி அறிமுக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இளநிலை, முதுநிலை, இளமுனைவர் பட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா appeared first on Dinakaran.