×

மின்னணுவியல் தேர்வில் குளித்தலை அரசு கல்லூரி மாணவர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

குளித்தலை, மார்ச்26: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி மாணவர் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி மின்னணுவியல் துறையைச் சேர்ந்த மாணவர் கதிரேசன். இவர் முதுநிலை மின்னணுவியல் பாடப்பிரிவு தேர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கலா மாணவன் கதிரேசனை பாராட்டி வாழ்த்தி சான்றிதழ் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் . ரவிச்சந்திரன் மின்னணுவியல் துறை தலைவர் பேராசிரியர் அன்பரசு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் வேணுகோபால் மற்றும் மின்னணுவியல் பேராசிரியர்கள் மகேந்திரன், வீரமுரளி பிச்சமுத்து , உடற்கல்வி இயக்குனர் (பொ) பேராசிரியர் முனைவர் வைரமூர்த்தி மற்றும் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆகியோர் மாணவர் கதிரேசனை பாராட்டி வாழ்த்தினர்.

The post மின்னணுவியல் தேர்வில் குளித்தலை அரசு கல்லூரி மாணவர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : BAUTTALI GOVERNMENT COLLEGE ,State College of Art ,Department of Electronics, State College of Arts and Electronics ,Badatali Government College ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதிகளில் வேகத்தடைகளில் வர்ணம் பூசாததால் விபத்து